கும்மிடிப்பூண்டி ஓபிஜி தொழிற்சாலையில் தேசிய பேரிடர் தயார் நிலை குறித்து ஆய்வு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேல் தொழிலாளர்கள் 3 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து தொழிற்சாலைகளில் அமோனியா வாயு கசிவு பர்னஸ் வெடித்தல் உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் தொழிலாளர்கள் உயிரிழப்பு வழக்கமாகி வருகிறது. இதனை தொடர்ந்து.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் பாலாஜி மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஓ பி ஜி பவர் ஜெனரேஷன் தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆலையில் ஏற்படக்கூடிய ரசாயன கசிவு மற்றும் பிற அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து சோதனை மேற்கொண்டர் ஆலையின் மனித வள மேலாளர் பொது மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை விளக்கினர் அப்போது அமோனியா மற்றும் ஹைட்ரஜன் போன்ற ரசாயனக் கசிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக கட்டுப்படுத்த திறன் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பாய்லர் மற்றும் நிலக்கரி பங்கர் போன்ற மூடிய இடங்களில் பணியாளர்கள் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு வழிமுறையில் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அவசர காலங்களில் ஆளை முழுவதையும் பாதுகாப்பாக காலி செய்யும் திட்டம் அதற்கான வழித்தடங்கள் மற்றும் அறிவிப்பு அமைப்புகள் சரிபார்க்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஆலை கட்டுப்பாட்டு அறைக்கும் மாவட்ட கட்டுப்பாட்டறைக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் இடையேயான உடனடி தகவல் தொடர்பு அமைப்பு சரியாக செயல்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவம் முதலுதவி வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக சரி செய்யப்படும் என தாசில்தார் பாலாஜி தெரிவித்தார்.

செய்திகள் ; யாகோப் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *