கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழா. 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி ஓடிய எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் மாபெரும் எருது விழா கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆந்திர மாநில குப்பம், பலமனேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றது. இதில் 120 மீட்டர் தூரத்திற்கு தடுத்து மரத்திலான அரண்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவே வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு எருதுகளாக விடப்பட்டது. குறைந்த நொடியில் அது வேகமாக சென்று இலக்கை எட்டும் எருதுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என 105 பரிசுகள் தானம்பட்டி கிராம மக்கள் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிய எருதுகளை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் கண்டு களித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தானம்பட்டி கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்திகள் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed