திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள வானவில் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி சரணாலயம் இயக்குநர் அருள்திரு எஸ்.ஞான தினகரன் தலைமை தாங்கினார். திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்திரு எஸ்.பிரான்சிஸ் சேவியர் தொடக்க உரையாற்றினார். மாவட்ட மகளிர் கூட்டமைப்பின் தலைவர் எம்.பெரியநாயகி வரவேற்றார். எம்.சகாய மதுபாலா வரவேற்பு நடனமாடினார்.

இருதயநகர் பங்குத்தந்தை சி.பி. மைக்கேல்ராஜ், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொது செயலாளர் இதழாளர் அய்கோ வாழ்த்துரை வழங்கினர். மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவிகளும், ஒன்றியத் தலைவி சி.ஜாய்ஸ் சுகந்தி, பாப்பாக்குடி ஒன்றியத் தலைவி உச்சிமாகாளி ஆகியோர் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

திருநெல்வேலி மாநகர மகளிர் ஜெயராணி விழிப்புணர்வுப் பாடல் பாடினார். சிறந்த முறையில் சமூகப் பணியாற்றிய பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை ‘அன்பு ஹோம் கேர் நிஷாந்தி’க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தின் முக்கிய நிருவாகிகள் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் கோலாட்டம், நடனம், மௌன நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முடிவில் மாவட்ட மகளிர் கூட்டமைப்பின் செயலாளர் சேசு ரத்தினம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தின் நிருவாக மேலாளர் அருட்சகோதரி அருள் மேரி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

சமூக சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஏ. துரைராஜ், எம்.அன்னலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்ட செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476778

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed