திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டு பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தனித்திறன் கலைத் திருவிழா நிகழ்ச்சி கல்லூரியின் ஆடிட்டோரியம் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலாளர் ஸ்ரீ லலித்குமார் ஓ ஜெயின் தலைமை வகித்தார், கல்லூரியின் முதல்வர் சுஜாதா முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகையும் நடன இயக்குனருமான மெட்டிஒலி சாந்தி அரவிந்த், சிறகடிக்க ஆசை, பாரதி கண்ணம்மா சின்னத்திரை பிரபல நடிகை ரேஷ்மா பிரசாந்த், கானா உலகம் பாடகர் தரணி, உள்ளிட்டவர்கள் பங்கேற்று மாணவர்களின் மத்தியில் நடனமாடி மற்றும் பாடல்களைப் பாடி உற்சாகப்படுத்தினர்.

இதில் 11 கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறன் கலை திறமைகளை வெளிப்படுத்தினர், இசைக்கேற்ற பாடல்களை பாடியும், நடனமாடியும், காகித ஆடை வடிவமைப்பு, மெஹந்தி போட்டி, மாணவர்கள் ஒருங்கிணைந்து பாடிய பாடல்கள், உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் சான்றுகளும், வழங்கப்பட்டது.

இதில் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான ஆஷா தேவி நினைவு பரிசுகளை வழங்கினார், இறுதியில் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் முனைவர் பரத் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்திகள் : லோகநாதன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed