கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாக்குத் திருட்டு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமாரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு,

கிருஷ்ணகிரி கிழக்கு , மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான எம்.சி. ரகு, ஹரிஸ் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினார் ஏகம்பவாணன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சி.சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, ராஜாகுமாரவேல், நாராயணமூர்த்தி, நகர தலைவர் லலித் ஆண்டனி, சேலம் ரயில்வே கோட்ட உறுப்பினர் ரகமத்துல்லா, நகர் மன்ற வினாயகம், முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, ஒசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மைஜா அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கோபிநாத் கலந்துக்கொண்டு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையரைக் கண்டித்து கண்டன உரை ஆற்றினார்,

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொதுமக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிகாமல் வேடிக்கை பார்க்கும் ஞானேஷ்குமாரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய காங்கிரஸ் பிரிவு தலைவர் ஶ்ரீனிவாசன் சுவாமி கிழக்கு மாவட்ட கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் தீபா ராணி, அர்னால்டு ரமேஷ், ஆறுமுக சுப்ரமணி, வட்டாரத்தலைவர் தனஞ்செயன், முபாரக், கோவிந்தசாமி, வின்சென்ட்’ மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த வின்கா, உமாமகேஸ்வரி, யசோதா,
மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தசாமி, முன்ராஜ், மாநகர தலைவர் சாதிக்ஹான், வெங்கடேஷ் மாரியப்பன்,அப்சல், சத்திவேல்,கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், குட்டி, கருணாமூர்த்தி,கீர்த்தி கணேஷ், மைஜாஅக்பர், சக்கரவர்த்தி, பாண்டுரங்கன், வாஜித் பாஷா, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

a

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed