2023 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் சித்திரைவேல் என்பவர், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் Cr.No.08/2023, U/s. 5(l), 6 of POCSO Act, 363, 506(ii) IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி சித்திரைவேல் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, வழக்கின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொடர் பின் தொடர்தல் மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முறையாக பின்தொடர்ந்ததன் விளைவாக, குற்றவாளி சித்திரைவேலுக்கு சிவகங்கை POCSO நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.4,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed