முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் உலகம் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், சூளகிரி அரசு பெண்கள் மேல் நிலைபள்ளியில் கிராமிய பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது

ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு ஜெ,ஆர்,சி, மண்டல ஒருங்கிணைப்பாளர்
செந்தில் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்
அரிமா கோவிந்தசாமி, களப்பணியாளர் வரலட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டு நாட்டிற்கு முதுகெலும்பாக திகழும் ஆசிரியர்களின் பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து மகிழ்வித்தார்.

மேலும் இந்த ஆசிரியர் தின விழாவில் குழந்தை திருமணம் இல்லாத பள்ளியாக உருவாக்குவேம் என பள்ளியில் பணிபுரியும் 65 ஆசிரியர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டதோடு குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுவோம் என்றும் உறுதி மொழியினையும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் விமலா நன்றி கூறினார்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
