கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (11.09.2026) ஆசிரியர் நாள் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் மூவர்ண தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். வட்டார வள மைய ஆசிரியர் வே. சண்முகம், உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், மு. பயாஸ்பாஷா, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில்……

ஆசிரியர் நாளின் சிறப்பு, விழா நடத்தவேண்டியதன் அவசியம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறியதோடு, சமுதாயச் சிற்பிகளான ஆசிரியர் களுக்காக நடத்தப்படும், ஆசிரியர் நாள் விழாக்கள் வெறும் அரசு விழாக்களாகவோ, பள்ளி கல்லூரி விழாக்களாகவோ அமையாமல் சமூக, சமுதாய விழாக்களாக மாற வேண்டும்.

இதன் மூலம்தான் ஆசிரியர்களின் பணிக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என வலியுறுத்திக்கூறி, இந்த ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற மாரம்பட்டி தலைமை ஆசிரியர் இரா. அமுதசெல்வி, கதவணி தலைமை ஆசிரியர் ந. ஜோதி மற்றும் இப்பள்ளியில் தனக்கு உதவியாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி மு. சாந்தி அனைவருக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஆசிரியர் நாள் குறித்து மாணவர்கள் பேச்சு, கவிதைகள் மூலம் தமது திறன்களை வெளிப்படுத்தினர். பின்னர் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *