2011 ஆம் ஆண்டு சுமார் 12.000 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 5,000/- வழங்கினார்கள். தற்போது தற்போது மாதம் ரூ 15.000/- வழங்கப்பட்டு வருகிறது. வாரம் மூன்று அரை நாள் வரவழைத்து வழங்குகிறது. இதனால் மற்ற நாட்களில் வேறு வேலைக்கும் செல்லாமல் இரண்டும் கெட்டா நிலையில் தன வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் கடினமான வாழ்க்கையை வந்து வருகிறீர்கள் தற்போதைய அரசு ஒப்பந்த தொகுப்பூதியத்தில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறி அளித்துள்ளது.
கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் நிறைவேற்ற வேண்டும் , அதுவரை வாரத்தில் ஐந்து வேலை நாட்களும் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் , தற்போது அரசு பள்ளிக்கல்வித்துறை 2,400 உடற்கல்வி ஆசிரியர்கள் காலி பணியிடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

அந்த பணியிடங்கள் அனைத்தும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை கொண்டே நிறப்ப வேண்டும். மேலும், படிப்படியாக 12 ஆயிரம் சிறப்பாசிரியர்களையும் வாரத்தில் ஐந்து வேலை நாட்களும் பள்ளிக்கு வரவழைத்து மாதம் ரூ 25.000 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் என உரைநிகழ்த்தினார்.
இதே கருத்தை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் , தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சங்கரபெருமாள் , கல்வியாளர் பிரின்ஸ. கஜேந்திபாபு ஆகியோரும் உரை நிகழ்த்தினர் , உண்ணாவிரத போராட்டத்தை பழச்சாறு கொடுத்து அ.மாயவன் முடித்துவைத்தார்.

முடிவில் அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஆற்றலரசு நன்றி தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
