கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், ராகி, கம்பு, நிலக்கடலை, குச்சி கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றனர். எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை பிடிக்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு தயார் செய்யப்பட்டு கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்டுபன்றிகளை கூண்டு வைத்து பிடிப்பது தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சீத்தாராமன் தலைமையில் 10 க்கு மேற்பட்ட வனச்சரக அலுலர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான காளிக்கோவில் அருகே உளள துரை ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு வரும் காட்டுப் பன்றிகளை பிடிக்க முதல் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சீத்தர்ராமன் கூறுகையில்….
மாவட்டத்தில் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் இந்த காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க, மாவட்ட வனத்துறை அதிகாரியின் ஆலோசனைப்படி முதல் முறையாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு தயார் செய்யப்பட்டு காளிகோவில் அருகே உள்ள துரை பகுதியில் உள்ள விளைநிலத்தின் அருகில் அமைக்கப்பட்டு வனத்துறையினர் முலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் காட்டுப்பன்றிகளை கவரும் வகையில் கூட்டிற்குள்
நிலக்கடலை, கேரட், பீன்ஸ், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர்…. காட்டுப்பன்றிகளால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தோம்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தற்போது வனத்துறையினர் கூண்டுகள் வைத்து காட்டுபன்றியை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்த முயற்சி விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பையும் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
செய்திகள் : மாருதி மனோ எதிரொலி இன் / 8939476777
