தமிழ்நாடு முழுவதும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மறுக்கட்டமைப்பு செய்ய மேலாண்மைக் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதை வேறு ஒரு நாளுக்கு மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் கோரிக்கை விடுத்துள்ளார் அதில் ;
ஏற்கனவே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு கட்டமைப்பு செய்யப்பட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் நாளை (24.10.2026 ) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பருவ மழை தொடங்கப்பட்டு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் ஏற்கனவே மழை பெய்து வருகிறது மேலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மறுக்கட்டமைப்பு செய்ய மேலாண்மைக் குழு கூட்டம் நாளை ( 24.10.2026 ) சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக மழை வரும் பட்சத்தில் பெற்றோர்கள் பெருமளவில் பங்கெடுக்காத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆதலால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்கள் நாளை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை மறுக்கட்டமைப்பு கூட்டத்தை தள்ளி வைத்து அனைத்து பெற்றோர்களும் கலந்துக் கொள்ளும் விதமாக வேறு ஒருநாளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை நடத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
