அலைபேசி மூலம் தோழர் சகாயராஜ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொன்ன ஐயா பழ நெடுமாறன் அவர்கள் !
உலக தமிழ் மக்களின் ஒரே தலைவர் ஐயா பழ நெடுமாறன் அவர்களை இன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, வரும் 18 ம் தேதி, நீலகிரி மாவட்டம் குன்னூரில், நீலகிரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் கோவை PSG மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் பற்றிய தகவலை அறிந்து, மாவட்ட தலைவர் தோழர் சகாயராஜ் அவர்களுக்கு அலைபேசி மூலம் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், அந்த பகுதியில் உள்ள இலங்கைத் தோழர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ள, PSG மருத்துவமணை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில், ஐயா அவருடைய மகன் மாணிக்கம் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், சமூக ஆர்வலர் கல்லிடை அசன் சேக், தேசிய குழு உறுப்பினர் K.A.T. அன்சாரி, VAO பம்மல் G. சந்திரன் ஆகியோர் ஐயா அவர்களுடன் இருந்தனர்.
செய்திகள் : PRO, பார்த்திபன் / எதிரொலி . இன் / 8939476777
