ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதி எமனேஸ்வரம் பர்மா காலனி சேர்ந்த முனியசாமி என்பவருடைய மனைவி கண்ணகி (35) .இவர் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
    
சம்பவ நாளன்று இரவு பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புற காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.
  
இதனிடையே, பரமக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சண்டையிட்டு கொண்டனர். இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அப்போது மீண்டும் அரசு மருத்துவமனைக்குள் ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவுகளாக சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
         
அது சமயம், அப்போது தலைமை பெண் காவலர் கண்ணகி சண்டையிட்டுக் கொண்டவர்களை பிடிக்க முயன்ற போது அந்த நபர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை துரத்தி சென்ற போது தலைமை பெண் காவலர் கண்ணகியை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்து சுயநினைவின்றி இருந்த தலைமை பெண் காவலர் கண்ணகி  உயிரிழந்தார்.
    

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் சந்திஷ் தலைமையில் பரமக்குடி டிஎஸ்பி சுகுமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரனை மேற்கொண்டு, சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்புராஜாவை (25) பரமக்குடி போலீஸார்கள் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த காவலரின் பெண் காவலரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் , அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும், உயிரிழந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அரசு சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்த தலைமை பெண் காவலரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் , அரசு பணி வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது பெண் காவலர்களை துணைக்கு அனுப்பக்கூடாது ஆண் காவலர்களை மட்டுமே அனுப்ப வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் ஆண் காவலர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

உயிரிழந்த தலைமை பெண் காவலரின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸை உறவினர்கள் வழிமறித்துள்ளனர்உடனடியாக அரசு வேலை அறிவிக்க வேண்டும் அதே போல் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார்களின் பேச்சு வார்த்தையை அடுத்து உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து உயிரிழந்த தலைமை பெண் காவலர் கண்ணகி உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இறந்த பெண் காவலர் கண்ணகிக்கு 1 பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் பரமக்குடி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறையினர்கள் மத்தியில் அதிர்ச்சியும் … சோகமும் … பர… பரப்பும் … நிறைந்து காணப்படுகிறது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed