“உலக இருதயத் தினத்தை” முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் இதய நலன், நோய் தடுப்பு, ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி மருத்துவமனையின் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் இ.அருணாசலம் கலந்து கொண்டு, இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதின் அவசியம் குறித்தும், இருதய நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவப் பயனாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

அப்போது பேசிய டாக்டர் இ.அருணாசலம், “இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட, இதய நோய் வராமல் தடுப்பது மிகவும் முக்கியமானது” என வலியுறுத்தினார். மேலும் முறையான உடல்நலப் பரிசோதனை, இருதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சமச்சீர் உணவு, தினசரி உடற்பயிற்சி, தேவையான நேரத்தில் முறையான மருத்துவ ஆலோசனை பெறுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிருவாக இயக்குனர் டாக்டர் சொர்ணலதா அருணாசலம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராஜசேகர், டாக்டர் கணபதி சக்திவேல், மருத்துவமனையின் பொது மேலாளர் மனோகர் ராம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவப் பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.

     இதயங்களைப் பாதுகாப்போம்!
ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம்!

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
கைபேசி : 8825850212

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed