திருமங்கலம் அருகே பழனியாபுரத்தை சேர்ந்தவர் பழனிராஜன், பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினிதா (25). இவர்களுக்கு ஏற்கனவே முதல் பெண் குழந்தை உள்ள நிலையில்,
வினிதா மீண்டும் கர்ப்பமாக இருந்தார் .இதனை தொடர்ந்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரசவத்திற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், சாதாரணமாக பிரசவம் ஆவதற்கு வழி இல்லாததனால், அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் குழந்தை எடுக்கப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலக்குறைவுடன் இருந்த வினிதா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் கொண்டு வந்த சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பிரசவமான சில நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்ததால்,அரசு மருத்துவமனையில் சிகிச்சை தவறாக அளிக்கப்பட்டு இருப்பதாக கூறி மருத்துவமனைக்குள் புனிதாவின் உடலை வைத்து மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வினிதாவின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு உரிய காரணத்தை தெரிவிக்க கூரியும் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைநடத்தி வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed