தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 28, 2026 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப். விஜயால் தொடங்கி வைக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையிலான (22 காரட் மற்றும் பிஐஎஸ் முத்திரை) தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த மற்றும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்மார்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். அவர்கள் பிக்மி (PICME) மற்றும் ஆர்சிஹெச் (RCH) தளங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு ஆன்லைனிலோ அல்லது நேரிலோ தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாயும் – சேயும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போதே மோதிரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தங்க மோதிரமும் தனித்துவமான வரிசை எண் மற்றும் பாதுகாப்பான கசிவற்ற கവருடன் (Tamper-proof packaging) வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மதுரையில் துவக்கி வைத்த அதே நேரத்தில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எம்.எஸ்.ரவி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.

இதில் தவெக நிர்வாகிகள் சிலம்பரசன், கோபி,வெற்றிமாறன், அருண் பாண்டி, சலீம், பொன்னேரி மணிவண்ணன், பிரளயம்பாக்கம் மாறன்,மீஞ்சூர் சார்லஸ், லட்சுமிபுரம் சதீஷ், வழக்கறிஞர் மீஞ்சூர் மாரி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed