தமிழகத்தில் தாய்மையைப் போற்றவும், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கவும், “தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்” தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

​இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஈன்றெடுக்கும் உயிருடன் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் 1 கிராம் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும்.22.06.2026 முதற்கொண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் இத்திட்டத்தைப் பெற தாய்-சேய் பாதுகாப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தென்னரசு மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தினைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நலப் பணிகள் இணை இயக்குனர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed