பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தூய்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரையின்படியும், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் செங்கல்பட்டு மண்டல இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி பொன்னேரி நகராட்சியில் நீண்ட காலமாக நெடுஞ்சாலை துறையால் அகற்றப்படாமல் இருந்த சாலையின் தடுப்பு சுவர் ஓரத்தில் வளர்ந்துள்ள செடிகள், கொடிகள் மற்றும் மண்களை பொன்னேரி நகராட்சியால் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பஞ்செட்டி சாலை மற்றும் டி.எச். ரோடு,ஹரிஹரன் பஜார் வீதி, பழவேற்காடு சாலை ஆகிய பகுதிகளில் இந்த தூய்மை பணி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. நகராட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் புதுவாயல் புறவழிச் சாலையில் சென்ட்டர் மீடியம் பகுதியில் செடிகளை வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
