தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரை மாற்றி, தற்போதைய த வெ க அரசு காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்ற பெயரில் இன்று தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ள நிலையில்,

திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆறு முதல் எட்டு வரை உள்ள மாணவிகள் 462 பேருக்குகாலை உணவாக சர்க்கரைப் பொங்கல் ,வெண் பொங்கல், வடை சாம்பார் உள்ளிட்டவை பரிமாறப்பட்ட நிலையில், இதில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் காலை உணவு கொடுக்கும் நேரம் தாமதமானது. 

சுமார் 30 நிமிடத்திற்கு மேல் காலை உணவுக்காக காத்திருந்த மாணவிகளுக்கு காலை 9:30 மணி அளவில் உணவகத்திற்கு சென்று இட்லி வாங்கி வந்து எஞ்சியுள்ள மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. திட்டம் துவங்கிய முதல் நாளே பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு காலை உணவு பற்றாக்குறை ஏற்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

செய்திகள் : காளமேகம் : எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed