கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டம் இன்று 22.09.2026 மாநிலம் முழுமையும் துவக்கப்பட்டது. அதன்படி இன்று இப்பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து அரிசி பொங்கல், காய்கறி சாம்பார் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ.ஆனந்தன், மு.பயாஸ்பாஷா, பூ.ராம்குமார், இரா.ஜீவா, கணினி பயிற்றுநர் ச.மரகதம், சமையலர்கள் காந்தா, சங்கீதா மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed