வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கொடுக்கந்தாங்கள் கிராமத்தில் பொது தெருவழி மற்றும் குடிநீர் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சார்லஸ் சுந்தர் சிங் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவில், கிருத்துவ தேவாலயத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சர்வே எண் 9-ல் உள்ள சுமார் 2 சென்ட் வழிபாட்டுத் தளத்தில் தேவாலயம் அமைத்து வழிபாடு நடைபெற்று வருவதாகவும், அதனை ஒட்டியுள்ள பழைய கோயில் மற்றும் பொது வழித்தடப் பகுதிகளில் கலைச்செல்வி, ராஜசேகர் ஆகியோர் ஆக்கிரமிப்பு அராஜகங்கள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கோயிலுக்குச் செல்லவும், தெருவழியாக நடமாடவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் கிணற்றைப் பயன்படுத்த முடியாத நிலை கிணற்றுக்கு கம்பி வேலி போட்டு மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், சுசிலா, (லேட்) பக்தன் என்பவரின் பிடியில் உள்ளதாகக் கூறப்படும் குடிநீர் கிணற்றைச் சுற்றி இரும்பு வேலி அமைத்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆவணங்களைச் சரிபார்த்து உரிய விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பொது இடங்கள் மற்றும் குடிநீர் கிணற்றை மீட்டு, பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் சட்டவிரோதமானது என உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகள் : மூர்த்தி / எதிரொலி / 8939476777
