
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், பிசியோதெரபி முகாம்கள் நடைபெற்றது.


முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை முறைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி முறைகளும் வழங்கப்பட்டது. மேலும் கண் சிகிச்சை முகாமில் இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மேல்பரிந்துறை நடைபெற்றது. மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை சர்க்கரை வியாதி பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி அவர்கள் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சதீஷ் தேவ் ஆகியோர் கிராமப்புற பகுதியில் தாங்கள் செய்து வரும் சேவைகள் குறித்தும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்னெடுத்து வரும் இலவச சேவைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.


தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்ஆர் சுபாஷ் முகாமில் கலந்து கொண்டு வேல்ஸ் மருத்துவமனையின் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ நலன் அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தினை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ள இருவருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.


சங்கத்தின் துணைத் தலைவர் ஜி பாலகிருஷ்ணன், பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவகுமார், மூத்த பத்திரிக்கையாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மாற்றுத்திறனாளர்கள் நலன்கள் குறித்தும் மாற்று திறனாளர் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் குறித்தும் அவர்களுக்காக அரசு செய்து வரும் உதவிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை தலைவர் ஆனந்தி செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்தனர்.


வேல்ஸ் மருத்துவமனை தலைமை பிசியோதெரபி நிபுணர் டாக்டர் வித்யா லட்சுமி, உதவி பிசியோதெரபி நிபுணர் டாக்டர் ஜனனி, கிளினிக்கல் பிசியோதெரபிஸ்ட் டாக்டர்.சபரி வாசன் ஆகியோர் பிசியோதெரபி குறித்த விளக்கம் அளித்து பிசியோதெரபி சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள், பொருளாளர் யாக்கோபு, செய்தி தொடர்பாளர் முத்து ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னை வசந்தம் கல்வியில் சமகால அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
