ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவில் வசிப்பவர்கள் ராதாகிருஷ்ணன். (எலக்ட்ரானிக் வேலை செய்பவர்) மனைவி.ரூபா
(வாய் பேசமுடியாதவர்) தம்பதியினர் இவர்களுக்கு ரோகித்(7) என்ற தனியார் பள்ளியில் இரண்டாவது வகுப்பு படிக்கும் மகன் மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்ற ரோகித் மீது அங்கு வந்து திரும்பிய தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் முன் சக்கரத்தில் சிக்கிய ரோகித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ரோகித் இறந்துவிட்டதாக கூறியதையடுத்து உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் துக்கம் தாலாமல் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த ஏஎஸ்பி சைண்டேன் ஸ்வப்நிலா அனில் ஏடிஎஸ்பி. ரமேஷ் ஆகியோர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ்.எஸ்ஐ செல்வம் ஆகியோரை அழைத்து உடனடியாக வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்வதோடு. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனிருந்து உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட தேவையான உதவிகள் செய்து தரும்படி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சுப்ரமணியம்(32) கைது செய்யப்பட்டார் . உடற்கூறு ஆய்வு முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்திகள் ; ராதாகிருஷ்ணன் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *