ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக உரிமைப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு இடம் அமைந்துள்ளது.
69-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவு இடத்தில் பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் சார்பில் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் இராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராணி உள்பட தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதனையொட்டி,முதல் மரியாதையாக அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, செல்லூர் கிராம பொதுமக்கள், அனைத்து மகளிர் மன்றங்கள், இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எஸ்.சுந்தரராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் குடும்பத்தினர்கள் சார்பில் மகள் சுந்தரி பிரபா ராணி, பேரன்கள் பொறியாளர் சக்கரவர்த்தி, ஆரோக்கிய கோமோகன், ஜீவன் உள்பட குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் இராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராணி உள்பட பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர்கள் திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தாய்த் தமிழர் கட்சி சார்பில் பரமக்குடி பி. எம். பாண்டியன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் பரமக்குடி பொறுப்பாளர் கோபிராஜன் தலைமையில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், கே.கோ.அருண்ராஜ், மரு. வி.கே.ராஜீவ், பெ. மதன் ராஜா,மரு. டி. கே.பிரபு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அது சமயம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், உள்பட எம்.எல்.ஏ.க்கள் தமிழ் செல்வி, சத்யா, சபரி இளங்கோவன், கார்த்திக், அய்யனார், சிந்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.முருகேசன், சதர்ன் பிரபாகரன், முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆணிமுத்து உள்பட மாநில, மாவட்ட ,நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கட்சியினர்கள் உடன் இருந்தனர்.

மறுமலர்ச்சி திராவிடக் கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், சதர்ன் திருமலை குமார் உள்பட கட்சியினர்களும், தொடர்ந்து , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், அவரது புதல்வர் மரு. ஈஸ்வர பிரசாத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சர் இராஜேஷ்குமார் உள்பட ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இராஜாராம் பாண்டியன் , வக்கீல் இளமுருகன், மாநில,மாவட்ட , நகர் கழக கட்சியினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளரும், ராமநாதபுரம் எம்.எல். ஏ.காதர்பாட்சா வெள்ளைச்சாமி தலைமையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அது சமயம் பரமக்குடி எம்.எல்.ஏ. கே.கே. கதிரவன், முன்னாள் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே. வி. ஆர். ராம்பிரபு, கோ.தளபதி, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகரன், நகர்மன்ற தலைவர்கள் பரமக்குடி – சேது கருணாநிதி, ராமநாதபுரம் – கார்மேகம் , பரமக்குடி நகர் கழகச் செயலாளர் அப்துல் மாலிக், நகர்மன்ற உறுப்பினர் ஜீவரெத்தினம், பொறியாளர் செந்தில் செல்வானந்த் உள்பட மாவட்ட, நகர, நகர்மன்ற உறுப்பினர்கள்,பேரூர் கழக நிர்வாகிகள், கட்சியினர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், மரு. மணிகண்டன், இராஜலெட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அது சமயம் , பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எஸ்.முத்தையா, முன்னாள் நகர் கழகச் செயலாளர் எம்.கே.ஜமால், அம்மா பேரவை நகர் கழகச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினர் வடமலையான் , வடிவேல்முருகன் உள்பட மாவட்ட ,நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கட்சியினர்கள் கலந்து கொண்டனர்.
எஸ். டி. பி. ஐ . கட்சி மாவட்டத் தலைவர்கள் நியாஸ்கான், நீருல் ஆமீன் தலைமையில் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்பட கட்சியினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் கருப்புச்சாமி, முத்துவாப்பா , சத்யராஜ் வளவன், யோசேப்பு ஒருங்கிணைப்பில் அமைச்சர் வன்னி அரசு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் காமராஜ் செல்லத்துரை தலைமையில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அது சமயம், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சியினர்கள் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தவ அஜித் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவனன், பொருளாளர் சத்யபாமா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கட்சியினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியினர்களுடன் திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மயில் முருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நகரச் செயலாளர் அன்பு தெட்சிணாமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் மகேஸ்குமார் முன்னிலையில் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அவரது புதல்வரும், மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஷியாம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அது சமயம் கட்சி நகரைச் செயலாளர் ராஜ்குமார் உள்பட கட்சி மாநில, மாவட்ட, நகர் , பேரூர் கழக நிர்வாகிகள், கட்சியினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் முரளிதரன் முன்னிலையில் கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில பொதுச்செயலாளர் இராம சீனிவாசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நடிகை கஸ்தூரி உள்பட மாவட்ட , நகர், பேரூர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , புதுச்சேரி மாநிலம், இலங்கையைச் சேர்ந்த சமுதாய மக்கள் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, அவரது நினைவிடம் அருகே அமைந்துள்ள அன்னாரது மணிமண்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும் , முனைப்பாரி ஏந்தி வந்தும் அன்னாரது நினைவிடத்தில் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பரமக்குடி நகர், அவரது நினைவிடம் – மணிமண்டபம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸார்கள் குவிக்கப்பட்டு போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
