ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி, சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி பிரார்த்தனை செய்தனர்.
நாடெங்கும், கடும் கோடை வெயில் அடிக்கிறது. தென்-மேற்குப் பருவக்காற்றால் வேண்டிய மழை நமக்கு வராமல், எங்கும் கடும் வறட்சி நிலவுகிறது. குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகள் வெப்பத்தால், வறண்டு போய், எங்கு பார்த்தாலும் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் பக்த சபாவைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் எல்லாம் சேர்ந்து, பாவை ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் 4-வது பாசுரமான “ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்” என்ற பாசுரத்தைப் பாடியபடி, மாட வீதிகளில் வலம் வந்தனர்.

இந்த ஆண்டாளின் பாசுரத்தைச் சொன்னால், மழை வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் அரையர் வடபத்ரசாயி, கோவில் தலைமை அர்ச்சகர் முத்து பட்டர், வழக்கறிஞரும் எழுத்தாளருமான எஸ். ரமேஷ், ஸ்ரீ ஆண்டாள் பக்த சபா நிர்வாகிகளான ஸ்ரீதேவி, இந்திரா, சீதா, ஜெயலட்சுமி, சேஷாத்ரி, ஜெகன்னாதன், விஞ்சிமூர் ராஜகோபால், ரோட்டரி க்ளப் வேலாயுதம், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed