விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 39 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஐந்து தினங்கள் நடைபெறும் விழாவில் தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மூன்றாவது நாளில் இலவச திருமணங்கள் நடத்தப்பட்டது.

ஏழை – எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் என். எஸ். ராமராஜ் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்தார். வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து திரு மாங்கல்யம் கட்டி, கால்களில் மெட்டி அணிவித்து அனைவருக்கும் சீர் வரிசைகள் சைக்கிள் உள்பட அனைத்து பொருட்களும் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed