திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அவர்கள், “விவசாயிகளிடம் மோசடி நபர்கள் பணம் பறிப்பதைத் தடுக்கிறேன்” என்ற பெயரில் (ந.க.எண்.1959/2026), ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் குற்றவாளிகள் போல சித்தரித்து, அவர்களை அவமதிக்கும் வகையில் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ) வன்மையாகக் கண்டிக்கிறது.
போலி நபர்கள் மோசடி செய்தால், அவர்கள் மீது சட்டப்படி தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதற்காக நேர்மையாகப் பணியாற்றும் முழு பத்திரிகைத் தொழிலையுமே கொச்சைப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வட்டாட்சியரின் இந்தச் செயல், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது.
களத்தில் உண்மையாக உழைக்கும் பத்திரிகையாளர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல். அரசுக்கும் பத்திரிகைத் துறைக்கும் இடையே தேவையற்ற மோதலை உருவாக்கும் முயற்சியாகும்.
பத்திரிகையாளர்கள் பணம் கேட்பதாக பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, மோசடி செய்த நபர்கள் யார் என்பதை வட்டாட்சியர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களை அவமதிக்கும் இந்தச் சுற்றறிக்கையை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
மேலும், தன் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம்.

டி. எஸ். ஆர். சுபாஷ்
பொதுச் செயலாளர் – இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் (IJU)
மாநிலத் தலைவர் – தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ)
செய்திகள் ; லெனின் லோகேஷ் /எதிரொலி / 8939476777
