விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான 67-ஆவது பாரதியார் தின, குடியரசு தின டேக்வாண்டோ விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜபாளையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் விளையாட்டில் பங்கேற்பதற்கு ரயில்வே சாலையில் உள்ள எஸ்.எஸ். அரசு பள்ளியில் முன்பதிவு செய்யப்படவேண்டும். அதற்காக முன் கூட்டியே மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரிய பெருமக்கள் பள்ளிக்கு வந்துயிருந்தனர். பதிவு செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட மாணவிகள் தனியார் பள்ளிகள் மற்றும் விடுதியில் தங்கினர். மீதி இருந்த 800க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளியிலேயே தங்கியிருந்தனர்.

பள்ளி வளாகத்தில் போதிய குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை. குளிப்பதற்கு வசதி செய்துதரப்படவில்லை, சில அசௌகரியங்களால் மாணவிகள் மனநலன் குன்றி சோர்வாக காணப்பட்டனர். ஏற்பாட்டாளர்கள் முன் கூட்டியே எத்தனை மாணவிகள் விளையாட வருகைதர இருக்கிறார்கள், அவர்களுக்கான தங்கும் இடங்கள், வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் போனதால் தான் இடநெருக்கடியில் கொசு கடியில் தூங்க வேண்டி அவலம் ஏற்பட்டுவிட்டது என மாணவிகளுடன் வந்தவர்கள் புலம்பினர்.

செய்திகள் ; ராதாகிருஷ்ணன் ராஜா / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed