ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில் காவலாளியாக பழனிச்சாமி வயது 58 என்பவர் வேலை பார்த்து வருகிறார் இங்கு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் முடிந்தவுடன் அங்குள்ள அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பாட்டு போட்டு டான்ஸ் ஆடியதாக தெரிகிறது அதை திருமண மண்டப காவலர் பழனிச்சாமி கண்டித்துள்ளார் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த தினகரன் 25 முனீஸ்வரன் 21 மற்றொரு நபர் மூன்று பேர் சேர்ந்து காவலாளியின் கைவிரலை கடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.
தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் ஏ எஸ் பி சைன்டேன் ஸ்வப்னிலா அனில் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்.இதில் காவலாளி பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் (25) முனீஸ்வரன்(21) மற்றும் ஒரு இளைஞர் மூவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
செய்திகள் ; ராதாகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
