அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின், தேசிய செயற்குழு கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இரண்டு நாட்கள் நடைபெற்றது.

தமிழ்நாடு சார்பாக மாநில தலைவர் மற்றும் தேசிய செயலாளர் தோழர் டி. எஸ். ஆர. சுபாஷ், மாநில பொதுச்செயலாளர் தோழர் திண்டுக்கல் எம். ராமகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் கோவை எஸ். மோகன் ராஜ், தேசிய குழு உறுப்பினர் டாக்டர் K.S. சுப்பையா பாண்டியன், சிறப்பு பிரதிநிதி கழுகு வீரராகவன் மற்றும் புதுச்சேரி யூனியன் தலைவர் தோழர் எம். பி. மதிமகாராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர் .

தமிழகத்தின் சார்பாக தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ் பேசுகையில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுச்செயலாளர் திண்டுக்கல் எம். ராமகிருஷ்ணன் அவர்களை அகில இந்திய தலைவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், மாநில பொருளாளராக சேலம் ஏ. சேவியர் மற்றும் மாநில துணை தலைவராக தோழர் கே. ரமேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதையும் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தேசிய செயற்குழு உறுப்பினர் கோவை எஸ். மோகன் ராஜ் அவர்கள், கடந்த நான்கு மாதங்களின் (விஜயவாடா நிகழ்ச்சி முதல் துவங்கி..) சங்கத்தின் செயல்பாடுகளை வேலை அறிக்கையாக வாசித்தார்.

அந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 35 ஆண்டு விழா, மிகவும் பிரம்மண்டமான முறையில் விரைவில், சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed