வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக சங்க பொதுக்குழு கூட்டம் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா குடியாத்தம் விஜயலட்சுமி மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தார்களாக மாவட்ட விளையாட்டு DSO சேதுராஐன் தேர்தல் அதிகாரி ஓய்வு தாசில்தார் கஜேந்திரன் தேர்தல் பார்வையாளர்கள் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் மதன்குமார் முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் கோபாலன் கலந்து கொண்டனர்.


வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவராக இளையராஜா வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளராக இராசி .தலித் குமார் அமைச்சூர் கபடி கழக பொருளாளராக பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், சேர்மன் SA. சேட்டு மாவட்டத் துணைத் தலைவர்கள் CK. வெங்கடேசன் சோலை பாண்டியன் மேகநாதன்சாமி மற்றும் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
