மதுரையில் JCI Madurai என்ற தனியார் அமைப்பு மூலம் வருடா வருடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான Art & Craft வர்ண சங்கமம் என்ற ஓவிய போட்டி நடைபெறும். இவ்வாண்டு 50வது வருடத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனிச் சிறப்புகளை வழங்கினர். இப்போட்டியில் வர்ணம் பூசுதல், ஓவியம் வரைதல், காய்கறிகளில் சிலை செய்தல், முகத்தில் ஓவியம் வரைதல், Art from Waste என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் 3,500க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு JCI தலைவர் விஷால் வினோத், முன்னாள் தலைவர் ராஜன்பாபு, செயலாளர் முத்து, பொருளாளர் பிரவீன் மற்றும் பொறுப்பாளர் அருண் ஆகியோர் வழிநடத்தினர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed