ஏகனாபுரம் கிராம சாலையை ‘தளபதி விஜய் சாலை’ என மாற்றம் செய்ய வேண்டி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கிட்டத்தட்ட 1,100 நாட்களுக்கு மேலாக விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு இதுவரை கிராம சபை கூட்டத்தில் 16 முறை புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், 7 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும் , தீர்மானங்கள் இயற்றினர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக அமைந்த தவெக ஆட்சியில் புதிய விமான நிலையம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்று வரும் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் பசுமை விமான நிலையம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை இயற்றியுள்ளனர்.

ஏகனாபுரம் கிராம சாலையை ‘தளபதி விஜய் சாலை’ என பெயர் மாற்றம் செய்யக்கோரியும் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed