உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, ” பழங்குடி இன மக்கள் இயக்கம் ” சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அது குறித்து, பழங்குடியின மக்கள் இயக்க தலைவர், வழக்கறிஞர் K.சரவணன் அவர்கள் கூறுகையில்,

நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பல சட்ட, திட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அவைகள் எல்லாம் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில், போதுமானவைகளாக இருக்கவில்லை.

அதிலும், குறிப்பாக அரசு அறிவித்துள்ள பல அறிவிப்புகளும் உதவி திட்டங்களும், பழங்குடியின மக்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என்பது மிகவும் வருத்தம் பட வேண்டிய விஷயமாக உள்ளது. ஆகவே, தமிழக அரசு பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை ஏற்று அவைகளை நடைமுறைப்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் :

  1. பழங்குடி மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
  2. வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் பழங்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் வழங்க வேண்டும்.
  3. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
  4. நிலமற்ற பழங்குடி குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.
  5. ஒவ்வொரு பழங்குடி குடியிருப்பிற்கும் குடிநீர், சாலை, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
  6. தாட்கோ மூலம் மதுபானம் தொழில் கடன், மானியம் மற்றும் சுயதொழில் உதவிகளை எளிதாக வழங்க வேண்டும்.
  7. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வார்டுகளில் பழங்குடியினருக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளில் முன்னுரிமையும் இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்.
  8. தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கான சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீட்டை 2-ல் இருந்து 3-ஆக உயர்த்த வேண்டும்.
  9. பழங்குடியினருக்காக ஒரு பாராளுமன்றத் தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  10. மலையில் வாழும் பழங்குடியினர் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
  11. போலி சாதிச்சான்று பெறுவதைத் தடுக்க வேண்டும்.
  12. பழங்குடியினரின் நில உரிமை, வன உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.
  13. நீதிமன்றங்களில் நியமிக்கப்படக்கூடிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் விகிதாச்சார அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட முக்கிய கோரிக்கைகள் :

  1. நீண்ட ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும்.
  2. காட்டுப்பள்ளி, மெதூர், நத்தம்பாக்கம், தாமரைக்காக்கம், சிறுவாக்கம், பூஞ்சுளம், வஞ்சிவாக்கம், புதூர், ஆதூர், கண்ணம்பாக்கம் மற்றும் செப்பேடு ஆகிய ஊராட்சிகளில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளை பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டும்.
  3. திருவள்ளூர் (MP) பாராளுமன்றத் தொகுதியை பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டும்.
  4. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வட்டப் பகுதியில் பழங்குடி மாணவர்களின் தொழில் திறனை வளர்க்க தொழில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
  5. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வட்டம் ஆதியவந்திரில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி அமைக்க வேண்டும்.
  6. ஆவடி பேரூராட்சியில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டும்.
  7. பொன்னேரி நகராட்சியில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட உள்ள கோரிக்கைகளை தமிழக அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து, நடைமுறைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது பழங்குடியின மக்களின் மிக முக்கிய கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

செய்திகள் ; லெனின் லோகேஷ் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed