திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பழவை தமிழ்ச் சங்கம் துவக்க விழாவிற்கான ஆலோசனை கூட்டம் சென்னை சமூக சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.
பாரம்பரியமிக்க பழவேற்காடு பகுதியில் ஜாதி மதம் இனம் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள முன்னோர்கள் தமிழுக்கு அரும்பணியாற்றியுள்ளனர். கவிதை,பாடல்கள்,சொற்பொழிவுகள் என பல்வேறு நிலைகளில் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அத்தகு திறமைகளை அவர்களின் பின்வந்த இளைஞர்களும் மாணவர்களும் அதனை வெளிக்கொண்டும் வரும் விதத்தில் பழவை தமிழ் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவர சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக துவக்க விழா திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆலோசனைக் கூட்டம் பழவேற்காட்டில் உள்ள சென்னை சமூக சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் ஆலோசனைகள் பெறப்பட்டு பின் பழவை தமிழ்ச் சங்கத்திற்கான நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.
இதில் தலைவராக தோணிரேவு தூயவன், செயலாளராக தாவீது ராஜா, பொருளாளராக ஜாப்பீர் அப்துல்லா, துணை தலைவராக முஸ்தஃபா, துணை செயலாளராக மீரான்பாஷா நிர்வாக குழு உறுப்பினர்களாக சின்னராசு, ஜான் பிரான்சிஸ், நமச்சிவாயம்,மௌலீஸ்வரன், கௌரவ தலைவர் எம்.எஸ்.காலேஷா,கௌரவ ஆலோசகர்கள் முத்து,ஜமீல் முஹம்மது,சட்ட ஆலோசகர் மகேந்திரன்,மக்கள் தொடர்பாளர் ஹாஜா மொய்தீன்,செயற்குழு உறுப்பினர் முனிவேல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர்கள் ஆரம்பாக்கம் சந்திரன், ஆண்டிக்குப்பம் திலகவதனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777

