ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , தமிழ்நாடு குறு - சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் , ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தோட்டக்கலை , மலைப்பயிர்கள் துறை, பொதுப்பணித்துறை, வஊரக வளர்ச்சி , ஊராட்சித் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மகளிர் திட்டம், பொதுச் சுகாதாரம் , நோய்த்தடுப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்வாரியம், நகராட்சி நிர்வாகத் துறை, பேரூராட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை, நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம், தரம், பயன்பாடு , காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்களின் தேவைகளை அறிந்து, ஒவ்வொரு திட்டமும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர் தரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், பணிகளில் எந்தவித காலதாமதமும் ஏற்படாமல் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திதுடன், அரசின் நலத்திட்டங்கள் , வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் , மனுக்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துறை சார்ந்த பணிகளில் வெளிப்படைத்தன்மை , பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு குறு - சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா வலியுறுத்தினார்.
ஒவ்வொரு துறையும் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றி, மாவட்ட வளர்ச்சிக் குறியீடுகளை மேலும் உயர்த்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டுமெனவும், வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு குறு - சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
