இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1514 பாகங்களில் 5,61,335 ஆண் வாக்காளர்களும், 5,72,143 பெண் வாக்காளர்களும் 57 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11,33,535 வாக்காளர்களாக உள்ளனர். இதற்கு முன்பு 06.04.2026 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் 5,59,525 ஆண் வாக்காளர்களும், 5,70,152 பேர் வாக்காளர்களும், 56 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11,29,733 பேர் வாக்காளர்களாக இருந்தனர்.
06.04.2026-க்குப் பிறகு பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 3,477 ஆண் வாக்காளர்களும், 3,830 பெண் வாக்காளர்களும் , 02 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 7,309 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே காலத்தில் (இறப்பு , முகவரி மாற்றம்) பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 1,667 ஆண் வாக்காளர்களும், 1,839 பெலர் வாக்காளர்களும், 01 மூன்றாம் பாலின வாக்காளரும் ஆக மொத்தம் 3,507 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு உள்ளது.

சட்டமன்ற தொகுதிகள் பின் வருமாறு : 2 209 . பரமக்குடி (தனி) .
ஆண் வாக்காளர்கள் : 1,16,423 .
பெண் வாக்காளர்கள் : 1,18,561 . மூன்றாம் பாலின வாக்காளர்கள் : 18 , மொத்த வாக்காளர்கள் : 2, 35,002 .
210. திருவாடானை .
ஆண் வாக்காளர்கள் :
1, 41,519 .
பெண் வாக்காளர்கள் :
1, 43, 545.
மூன்றாம் பாலின வாக்காளர்கள் : 24.
மொத்த வாக்காளர்கள் :
2, 85, 088 .
211 இராமநாதபுரம் .
ஆண் வாக்காளர்கள் :
1,54,061 .
பெண் வாக்காளர்கள் :
1,59,434 .
மூன்றாம் பாலின வாக்காளர்கள் :
12 .
மொத்த வாக்காளர்கள் :
3,13, 507 .
212. முதுகுளத்தூர்.
ஆண் வாக்காளர்கள் : 1,49,332 .
பெண் வாக்காளர்கள் :
1,50,603 .
மூன்றாம் பாலின வாக்காளர்கள் :
03.
மொத்த வாக்காளர்கள் : 2,99,938
ஆக மொத்தம் 4 சட்ட மன்ற தொகுதிகளிலும் 5,61,335 ஆண் வாக்காளர்களும், 5,72,143 பெண் வாக்காளர்களும், 57 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 11,33,535 மொத்த வாக்காளர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வாக்குப் பதிவு அலுவலர்களின் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்குப் பதிவு அலுவலர்கள் (அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர், இராமநாதபுரம்/பரமக்குடி) அலுவலகங்கள் , வாக்குச்சாவடி அமைவிடங்களில் (ஒதுக்கப்பட்ட இடங்கள்) பார்வையிடுவதற்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூவ இணையதளமான www.slections.tn.gov.in-ல் பொதுமக்கள் அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வசங்கரநாராயணன் , பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி , இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
