வேலியே பயிரை மேய்ந்த கதையாக வனப்பகுதியை அழிக்கும் வனத்துறை அதிகாரிகள்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது கூட்டத்தில் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளையும் குறைபாடுகளையும் வட்டாட்சியரிடம் எடுத்துக் கூறினர்

பாலமேடு அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறுகையில் வலையபட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள செடி கொடிகளை வனத்துறை அதிகாரிகளே அழித்து வருவதால் வனபகுதியில் உள்ள காட்டு மாடுகள் மற்றும் மிருகங்கள் ஊருக்குள் வருவதாகவும் இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்

வனத்துறையை பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் உள்ள செடி கொடிகளை அழித்து வருவதால் காட்டு மாடுகள் காட்டு பன்றிகள் சர்வசாதாரணமாக வலையபட்டி கிராமத்திற்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும், விவசாய வேலை செய்யும் விவசாயிகளை காயப்படுத்துவதாகவும் கூறினார்

. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய விவசாயி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டு மாடு முட்டியதில் காயம் பட்ட எனக்கு தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறினார் இதுகுறித்து வட்டாட்சியர் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் திணறினர் மேலும் வட்டாட்சியர் விவசாயி பக்கம் திரும்பி ஆதாரத்துடன் கூறவும் பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது என கூறிய நிலையில்

மற்றொரு விவசாயி எழுந்து வனத்துறையில் உள்ள காட்டு மிருகங்களில் எண்ணிக்கை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியும் குறிப்பாக வனப்பகுதியில் சிங்கம் புலி சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான மிருகங்களின் எண்ணிக்கை தெரியும் நிலையில் கூட்டமாகத் திரியும் காற்றுப் பன்றிகளின் எண்ணிக்கை தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது வனத்துறை அதிகாரிகளே வனப்பகுதிகளை அழித்து வருகின்றனர் இது குறித்து பலமுறை வனத்துறை அதிகாரியிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வனப்பகுதிக்குள் உள்ள செடி கொடிகளை அழிப்பதால் மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது மேலும் அடர்த்தியான செடி கொடிகளை அழிப்பதால் அந்த பகுதியில் உள்ள காட்டு மாடுகள் காட்டு பன்றிகள் போன்ற பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விலங்குகள் ஊருக்குள் வந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளது

ஆகையால் வனத்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி வனப்பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினார்கள் வனத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டு காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed