சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் முதலாம் ஆண்டு லதா ஸ்டாலின் சமூக நல அறக்கட்டளையை சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பச்சையப்பன் மகன் ஸ்டாலின் இவரது நினைவாக மதகுபட்டியில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனது மகனின் 26 ஆம் ஆண்டு பிறந்த நாளில் விழாவில் லதா ஸ்டாலின் சமூக நல அறக்கட்டளையை உருவாக்கினார்.

அந்த அறக்கட்டளையின் வாயிலாக, சுமார் மூன்று லட்ச ரூபாய் செலவில், 15 பெண்களுக்கு இலவச தையல் மிஷின் சலவை தொழிலாளர்களுக்கு துணி தேய்க்கும் இயந்திரம் மற்றும் கன்றுடன் கூடிய பசுமாடு ஆடுகள் என அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது இறுதியில் வள்ளி மயில் கல்வி நிறுவனர் ஏ.எம் கணேசன் நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed