காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரில் செயல்பட்டு வரும் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி புதர் மண்டி, புல் பூண்டுகள் முளைத்து காடு போல் காட்சியளித்து வந்தது. இதனால் மாணவ, மாணவிகள் விளையாட்டு மற்றும் உடற்கல்வி பயிற்சிகளில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மைதானத்தை சீரமைத்து தருமாறு பள்ளித் தலைமை ஆசிரியர் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக வெற்றி கழகத்தினர் மைதானத்தை முழுமையாகச் சுத்தம் செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.பி. முனிரத்தினம் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய செயலாளர் டி.ஆர். ரஞ்சித்குமார் தலைமையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்த பணியில் ஒன்றிய செயலாளர் டி.ஆர். ரஞ்சித்குமாருடன், உத்திரமேரூர் கிழக்கு பொருளாளர் கே. பிரகாஷ், இளைஞரணி மற்றும் விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக், இணை அமைப்பாளர் சாண்டில்யன், கிளை செயலாளர்கள் வினோத் குமார், புனிதவேல், ஏ. கதிர், சிவா, செல்வம், ராக்கி, வெங்கடேஷ், மேலும் விஜயகுமார் (வி.ஏ.), டி. ராமகிருஷ்ணன், எம். ரகோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மைதானத்தில் வளர்ந்திருந்த புதர்கள் மற்றும் புற்களை அகற்றி, மாணவர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் சீரமைத்தனர்.
இதன் மூலம் நீண்ட நாட்களாக பயன்பாடின்றி காடு போல் காட்சியளித்த பள்ளி மைதானம் மீண்டும் மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடற்கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனை முன்னிறுத்தி சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரமைப்புப் பணிக்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்தனர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed