திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி தாலுகாவில் கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாலுகாவில் பெரும்பாலான பகுதிகள் கிராமப் பகுதிகளாக உள்ளதால், இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய தினக்கூலிகளாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்கு செல்லக்கூடிய ஒப்பந்த பணி செய்யக்கூடிய தினக் கூலிகளாகவும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் பெரும்பாலும் எதிர்நோக்கி இருப்பது பேருந்தின் வசதியை எதிர்பார்த்து தான், ஆனால், பொன்னேரி மற்றும் பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பொன்னேரி நகர் பகுதியை கடந்து வெளியில் செல்ல வேண்டும் என்றாலே குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகின்றது. அதற்கு காரணம், பொன்னேரியை மையமாகக் கொண்ட தேரடி பகுதி, பழைய பேருந்து பகுதி, அம்பேத்கர் சிலை அமைந்திருக்கும் பகுதி ஆகிய மையப் பகுதிகளில் காலை, மாலை என எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருப்பது தான் இதற்குக் காரணம்,

கடந்த காலங்களில் பொன்னேரி நகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த பாதாள சாக்கடை பணிகள் தான் போக்குவரத்திற்கு இடையூறு என்ற நிலைமை இருந்து வந்தது. அந்த பணியும் கூட, 2018 ம் ஆண்டு துவக்கப்பட்டு மிகவும் மந்தமாக நடந்து வந்த சூழ்நிலையில், பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுத்ததால், தற்போது அந்த சிக்கலில் இருந்து பொன்னேரி பகுதி மக்கள் சிறிது தப்பித்து இருந்தாலும்,

தினமும் காலையும், மாலையும் தேரடி பகுதியில் பேருந்துக்காக கால் கடுக்க நின்று கொண்டிருக்கும் கல்லூரி மாணவ – மாணவிகள்


தற்போது, 1999 ம் ஆண்டு கட்டப்பட்ட பொன்னேரி பேருந்து நிலையத்தை தற்போது இடித்துவிட்டு புதியதாக கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், பொன்னேரி பேருந்து நிலையம் கட்டிடங்களை இடித்து புதியதாக கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் அவர்கள், நகராட்சி கமிஷனர் தனலட்சுமி அவர்கள், நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி ஆகியோர் முன்னின்று பூமி பூஜை செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி ஆறு மாதத்தில் நிறைவேற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும், 3,300 சதுர அடியில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் நேரக் காப்பாளர் அறை மற்றும் பயணிகள் காத்திருப்பு வளாகம், 8 கடைகள், ஆகியவைகளும் கட்டுப்பட உள்ளன. அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இப்பணி துவங்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை நிறைவேற்றி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராததால், பொன்னேரி பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

பொன்னேரி பேருந்து நிலைய கட்டிடப் பணி மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், தேரடி சந்திப்பு, பழைய பேருந்து நிலைய சந்திப்பு, அம்பேத்கர் சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தினமும் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மட்டுமில்லாமல், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ – மாணவிகளும் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய காலை – மாலை வேலையில் அந்த குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து காவலர்களும் நிறுத்தப்படாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதால், போக்குவரத்து நெரிசல்களையும் சரி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

பொன்னேரி பேருந்து நிலைய பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், சிரமப்பட்டு கொண்டிருக்க கூடிய பொன்னேரி பகுதி மக்கள் இந்த பணியின் சமகாலத்திலேயே துவக்கப்பட்ட அரசின் பல கட்டிடப் பணிகள் நிறைவேற்றப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், இந்த பேருந்து நிலைய பணி மட்டும் ஆமை வேகத்தில் கூட நடைபெறாமல், அப்படியே உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இப்ப பணிகளை கூடிய விரைவில் முடிக்காவிட்டால் பொன்னேரி நகர் பகுதி மட்டுமில்லாமல், பொன்னேரி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed