மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு 100 வார்டுகள் இருந்து வருகிறது. அந்த அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், பணி செய்யக்கூடியவர்கள் நிரந்தர பணியாளர்கள் மட்டுமில்லாமல் ஒப்பந்த அடிப்படையில் அதிக அளவில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இப்படி பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள் குறைக்கப்பட்டு, மாநகராட்சி முழுவதும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டே தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒப்பந்த நிறுவனமான அவர் லேண்ட் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இது ஆணையாளருக்கும் தெரியும் எனவும், இது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் பணியை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் தொழிலாளர்கள் சம்பளத்தை அதிக அளவு பிடித்தம் செய்வதாகவும், குற்றச்சாட்டை தொழிலாளர்கள் முன்வைக்கின்றார்.

மேலும், காலை 6 மணிக்கு எல்லாம் வந்து ரேகை வைக்க வேண்டும் அல்லது ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் அன்று அவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் எனவும் அதற்கு பதிலாக மாற்று ஊழியர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்படுவது இல்லை, இன்னும் மறுநாள் நாங்களே தான் அதே பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மேலும், மக்கும் குப்பை மக்காத குப்பையை ஊழியர்கள் தான் பிரித்து வாகனத்தில் ஏற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும், கடந்த காலங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு டப்பாக்கள் தனித்தனியாக பொதுமக்களுக்கு கொடுத்து வந்தார்கள். ஆனால், தற்பொழுது அதை கொடுப்பதில்லை நாங்கள் பிரிப்பதாக இருந்தால் எங்கள் கைகளில் பிரிக்கும் பொழுது அதில் மலம் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த கூடிய டைபர் மற்றும் நாப்கின்கள் உள்ளவை இருக்கின்றன. எங்களால் அதில் பிரித்து எடுக்க முடியாத நிலை உள்ளது எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்.

மேலும், காலையில் உணவு திட்டம் என்பது மிக மிக மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், அதிகாரிகள் யாராவது அந்த உணவை சாப்பிடுவார்களா ? என கேள்வியும் எழுப்பினர். அதற்கு பதிலாக எங்களுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வரவு வைத்தால் போதும் எனவும் சாப்பாடு எங்களுக்கு வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் , நேரடியாக தூய்மை பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் ஏற்கனவே நடைமுறை விதிகள் உள்ளது என, விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் நல சங்க நிர்வாகியை பூமிநாதன் தெரிவித்தார்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed