மதுரை மாவட்டம் திருமங்கலம்-  விமான நிலைய சாலை இத்தொகுதியின் முக்கியமான சாலையாக கருதப்படுகிறது. இந்நிலையில்,  கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் பேரில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் , கடந்த இரு மாதங்களாக பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி சகதியாக காணப்படுவதால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அசைந்தாடிய படியே மெதுவாக செல்லும் நிலையும், பள்ளி மாணவ மாணவிகள் மிதிவண்டிகளில் செல்வதற்கு கூட சிரமப்பட்டு செல்லும் நிலையில், முதியோர்கள் சென்று வர விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதால், தற்போதைய பொறுப்பேற்ற அரசு உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கற்பக நகர் குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed