ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் , வருவாய் , பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் சிறப்பு பட்டா குறைதீர்ப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பட்டா குறைதீர்ப்பு முகாம் முதுகுளத்தூர் வட்டத்தில் 2 நாள்கள் நடைபெறுகிறது. 07-ந்தேதி நடைபெற்ற முகாமில் பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, கணினி திருத்தம், உழவர் அட்டை , தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பான மனுக்கள் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். மேற்படி பெறப்பட்டு வரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதுகுளத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
