கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு நாளில் கோமாதா பூஜையுடன் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றதைத் தொடர்ந்து 48 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது,

இந்த மண்டல பூஜையின் நிறைவு நாள் பூஜையையொட்டி திருக்கோவில் முன்னதாக கந்திகுப்பம் பைரவர் திருக்கோவில் சுவாமி தவத்திரு பைரவர் சுவாமிகளின் நல்லாசியுடன் சிவச்சாரியர்கள் மூலமாகம் யாகவேள்வி பூஜை மேற்கொள்ளப்பட்டது,

இதன் முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கோமாதா பூஜையுடன் மங்கள வாத்தியத்துடன் பூரணாஹூதி செலுத்திய பின் சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும் அருள்மிகு மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு நீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர ஆராத்தியும் காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கட்சியளித்த அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும் அருள்மிகு மாரியம்மனை மரிக்கம்பள்ளி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர், பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டத

இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர்கள் மற்றும் மரிக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்த்த கிராம மக்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed