மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மதுரை குருதியேட்டர் சந்திப்பில் உள்ள லட்சுமி மஹாலில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்தில்லா சாலை, ஓட்டுநர் உரிமத்தின் அவசியம், பயணிகளின் பாதுகாப்பு, வாகனத்தின் உறுதிச்சான்று, வாகன எண்ணின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இறுதியாக போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விபத்தில மதுரையை உருவாக்கிட ஆட்டோ ஓட்டுநர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் செந்தில் சுரேஷ், செந்தில்குமார், தங்கமணி, கணேஷ்ராம், சோபனா, பஞ்சவர்ணம், பூர்ணகிருஷ்ணன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சந்தனகுமார், லிங்க்ஸ்டன், ஆண்டவர் TNSTC மேலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்,

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *