விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் திமுகவின் முன்னணி மேடைப் பேச்சாளருமான விபி ராஜன் 76வது பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் வாகைக் குளம் பட்டியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்துகொண்டு விபி ராஜனுக்கும், அவரது மனைவி முத்துலட்சுமிக்கும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் திமுகவின் பல மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சீர் மரபினர் வாரியத் துணைத் தலைவர் ராசா அருண் மொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வி.ரவி, மற்றும் காங்கிரஸ் பிரமுகர் டைகர் ஷம்சுதீன், மா. குருசாமி, செல்லச்சாமி, ந. பாஸ்கரன், கருப்பழகு உள்பட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
