சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர்கள்
அண்ணாமலை மற்றும் அவரது 3 – சகோதரர்கள். இவர்கள் 4 – பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது….

எங்களுக்குச் சொந்தமான புஞ்சை நிலம் சிவகங்கையில் உள்ளது. இந்த புஞ்சை நிலம் 59 பையூர் பிள்ளைவயல் கிராமம் சர்வே எண்43/1 விஸ்தீரணம் 1 ஏக்கர் 72 செண்டும், புல எண் 43/3 விஸ்தீரணம் 8 ஏக்கர் 40 செண்டும் சிவகங்கை டவுன் நகரப் புல எண் 34 -1, 35 எங்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் நுகர்வோர் வாணிப கழகத்திற்கு 76 செண்டு நிலத்தை மட்டும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொடுத்து அதற்கான இழப்பீட்டையும் பெற்று இருக்கிறோம் . இந்நிலையில் மீதமுள்ள எங்களின் நிலத்தை சிவகங்கையில் வசித்து வரும் KR. ராஜா என்பவர் வேறு சிலருடன் கூட்டுச் சேர்ந்து கூட்டுச் சதி செய்து எங்களுக்கு சம்பந்தமே இல்லாத நபர்களை வைத்து உண்மையை மறைத்து பவர் பத்திரம் பதிவு செய்துள்ளார்.

இந்த பவர் பத்திரத்தை பயன்படுத்தி எங்களுடைய நிலத்தை வேறு சிலருக்கு பத்திரப்பதிவும் செய்துள்ளார். மேற்கண்ட பிரச்சனைகள் தொடர்பாக 4 – வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது உண்மைகளை மறைத்து KR. ராஜா என்பவர் சட்ட விரோதமாக இந்த இடங்களை வேறு சிலருக்கு பட்டா மாறுதல்கள் செய்யவும் தீவிர முயற்சி செய்து வருகிறார். எனவே சமூகம் அவர்கள் KR. ராஜா மற்றும் இவரோடு சேர்ந்து கூட்டுச் சதி செய்பவர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து எங்களின் நிலத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்திகள் ; ஆனந்த் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed