மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் இருந்தனர்.

வெங்களமூர்த்தி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் உள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொதுமக்களுக்கு தற்காலிக நிவாரணமாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணி அரசு சார்பில்,மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைப்பதற்காக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கான பணிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு பெரிய குவாரிகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிரந்தர தீர்வாக கூட்டுக் குடிநீர் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், அனைத்து துறைகளின் நிதி நிலை, கடன் சுமை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், ஆய்வுகள் நிறைவடைந்த பின் 10 நாட்களுக்குள் அனைத்து துறைகளின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார் என்றார்

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed