மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை இரண்டாம் தேதியும் தீர்த்தவாரி திருவிழா நாளை மறுநாள் மூன்றாம் தேதியும் நடைபெற உள்ளது.
13 ம் நாள் திருவிழா சோழவந்தான் பாண்டிய குல வேளாளர் வடக்குரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சார்பில் நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
அதை தொடர்ந்து, உறவின்முறை சங்கத்தில் அம்மனுக்கு பால் தயிர் நெய் இளநீர் சந்தனம் திருநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து சங்கத்தின் முன்பு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது ஜெனகை மாரியம்மனு க்கு அலங்காரம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது இதில் வடக்கு ரத வீதி பாண்டிய குல வேளாளர் உறவின் முறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்றனர் பின்பு ஜெனகை மாரியம்மன் உறவின் முறை சங்கத்திலிருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார் வழிநெடுக பொதுமக்கள் தேங்காய் உடைத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர் கோவில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா பெருமாள் உள்ளிட்டோ ஏற்பாடுகளை செய்திருந்தனர் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவில் வடக்கு ரத வீதி பாண்டிய குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமார் பிள்ளை செயலாளர் சிவராஜன் பொருளாளர் சிங்கராஜ் மற்றும் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் சத்திய பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மண்டகப்படி ஏற்பாடுகளை வடக்கு ரத வீதி பாண்டிய குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் பொதுமக்கள்
செய்திருந்தனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
